முகப்பு /செய்தி /இந்தியா / 50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள் : மும்பையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள் : மும்பையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

50 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

50 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

தந்தை இறந்த பின்னர் தனது தாயாருக்கு அவரது 50 வயதில் மறுமணம் செய்து வைத்த மகளிம் செயலை கண்டு அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மும்பையில் ஃப்ரீலேண்ஸ் டேலண்ட் மேனேஜராக பணியாற்றி வருபவர் டெப் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவருக்கு இரண்டு வயது ஆன போது பிரபல மருத்துவரான அவரது தந்தை மூளையில் ரத்தக்கசிவு பாதிப்பால் உயிரிழந்தார்.

அப்போது அவரது தாய்க்கு 25 வயதுதான். மேலும் தந்தை உயிரிழப்பு பிறகு குடும்ப தகராறு காரணமாக ரியா சக்கரவர்த்தியின் தாய் மோசுமி அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று ரியா சக்கரவர்த்தியை வளர்த்து வந்தார்.

இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை.. ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

 இதனையடுத்து ரியா சக்கரவர்த்தி வளர்ந்ததும் மறுமணம் செய்து கொள்ளும்படி அவரை கேட்டுக்கொண்டு வந்துள்ளார். அதற்கு அவரது தாய் தான் திருமணம் செய்துகொண்டால் மகள் ரியா சக்கரவர்த்தியின் எதிர்காலம் என்ன ஆகும் என்னி மறுமணத்தை மறுத்து வந்துள்ளார். இதனையடுத்து மோசுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வபான் என்பவரை கடந்த மார்ச் மாதத்தில் 50வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவரது மகள் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி இப்போது என் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது. என் அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். முன்பெல்லாம் எல்லா விசயங்கள் மீதும் அவருக்கு ஓர் எரிச்சல் இருந்தது. இப்போது அம்மா தனது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Mumbai, Viral News