குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பின்னர், ‘தனது தந்தை வழியில் விமானப்படையில் சேருவேன்’ என அவரது 12 வயது மகள் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நிலையில் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூருக்கு பயணம் சென்றபோது, திடீரென ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியது. தீ பற்றி எரிந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் ஹெனரல் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுள் ஒருவரான விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகானின் உடல், குடும்பத்தினர் முன்னிலையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவரான பிரித்வி சிங் சவுகானின் குடும்பம் கடந்த 2006ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு மாறியது. 2000ம் ஆண்டில் விமானப் படையில் இணைந்த பிரித்வி சிங் சவுகான் கோவையில் உள்ள விமானப் படைதளத்தில் பணியில் இருந்த போது விபத்தில் சிக்கினார்.
Also read: 20 நிமிடங்களில் ஒமைக்ரான் உள்ளதா என கண்டறியலாம் - புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு
மறைந்த பிஎஸ்,சவுகானுக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஏழாம் வகுப்பு பயிலும் மகளும் இருக்கிறார்கள். நேற்று விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானின் சிதைக்கு மகனும், மகளும் இணைந்து தீ மூட்டிய பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானின் மகள் ஆராத்யா, தனது தந்தை ஒரு ஹீரோ, நான் அவரின் வழியை பின்பற்ற ஆசைப்படுகிறேன். அவரைப் போலவே விமானப்படையில் சேருவேன் என தெரிவித்தார்.
படிப்பின் மீது கவனமாக இருக்க வேண்டும் என என் தந்தை என்னிடம் எப்போதும் அறிவுறுத்துவார். படிப்பின் மீது கவனமாக இருந்தால், மார்க்குகள் தானாகவே வரும் என்பார் என தந்தையுடனான நினைவலைகளை அவர் பகிர்ந்தது கொண்டார்
தந்தை தான் ஹீரோ அவரை பின்பற்றி விமானப் படையில் சேருவேன் என 12 வயது மகள் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air force, Army Chief General Bipin Rawat, Helicopter Crash