ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 ஆண்டுகளில் 659 ஆசிட் வீச்சு வழக்குகள்.. முதல் இடத்தில் மேற்கு வங்கம்! தமிழகத்தின் நிலை என்ன?

3 ஆண்டுகளில் 659 ஆசிட் வீச்சு வழக்குகள்.. முதல் இடத்தில் மேற்கு வங்கம்! தமிழகத்தின் நிலை என்ன?

ஆசிட் வீச்சு தாக்குதல்

ஆசிட் வீச்சு தாக்குதல்

ஆசிட்வீச்சு வழக்குகளை மட்டும் மாநிலவாரியாக பிரித்து கணக்கிடும்போது, 160 வழக்குகளுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai, India

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்கவும் அரசு பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டுவந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கொலை, கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின்படி இந்தியாவில் 2018 மற்றும் 2020 க்கு இடையில் ஆசிட் தாக்குதல்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டும்  659 என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசிட்வீச்சு வழக்குகளை மட்டும் மாநிலவாரியாக பிரித்து கணக்கிடும்போது, 160 வழக்குகளுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 115 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 35 வழக்குகளுடன் ஒடிசா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி.. வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்குமாம்..!

இந்த மாநிலங்களைத் தொடர்ந்து 2018 முதல் 2020 வரையிலான ஆசிட் தாக்குதல் வழக்குகளின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் 34 வழக்குகளையும் , பீகாரில் 30, பஞ்சாபில் 29, குஜராத்தில் 27, கேரளாவில் 27, மற்றும் டெல்லியில் 23 வழக்குகளையும் பெற்றுள்ளன.18 ஆசிட் வீச்சு வழக்குகளை கொண்ட தமிழ்நாடு பட்டியலில் 23 ஆவது இடத்தில் உள்ளது

2018 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட ஆண்டில், இந்தியாவில் நடந்த குற்றச் செயல்களை வெளிப்படுத்திய ஆதாரங்களின் படி அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் அமிலவீச்சு வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் மற்ற வன்முறை குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தமான் மற்றும் நிக்கோபார், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் & டையூ, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் ஆசிட் வீச்சு வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தலைநகர் டெல்லியில் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 23 ஆசிட் வீச்சு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2019 ஆண்டு மட்டும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

First published:

Tags: Acid attack, Crime News, Women safety