Home /News /national /

புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா இன்றுடன் நிறைவு

புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா இன்றுடன் நிறைவு

தசரா பண்டிகையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள மைசூரு நகரம்

தசரா பண்டிகையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள மைசூரு நகரம்

விழாவின் முக்கிய அம்சமே இன்று நடைபெறும் ஜம்பு சவாரிதான். இந்த ஜம்பு சவாரி பிற்பகல் 3 மணிக்கு அரண்மனை முன்பு தொடங்க உள்ளது. ஊர்வலத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தொடங்கி வைக்க  உள்ளார்.

  • News18
  • Last Updated :
    இந்தியாவின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் மைசூரு தசரா நிறைவு விழா இன்று நடைபெற உள்ளது. இதற்காக மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி. 1610-ம் ஆண்டு முதன்முதலில் தசரா விழா கொண்டாடப்பட்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாப்பட்டு வரும் தசரா விழா கர்நாடகாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விழாவாகவே பார்க்கப்படுகிறது. அதே போல் மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதன் நினைவாக தசரா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு கடந்த 1972-ம் ஆண்டு முதல் தசரா விழா கர்நாடக மாநில அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 408-வது தசரா விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. தினமும் நடனம், இசைக்கச்சேரி, விளையாட்டு என ஒவ்வொரு நாளும் களைக்கட்டிய தசரா விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் விழாவின் முக்கிய அம்சமே இன்று நடைபெறும் ஜம்பு சவாரிதான். மைசூரு அரண்மனை முதல் பன்னி மண்டபம் வரை சுமார் 2 கிலோமீட்டர் நடைபெறும் இந்த ஊர்வலத்தைக் காண லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் வருகை தருவர்.

    விஜயதசமி விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக  12 யானைகள் வரவழைக்கப்பட்டு அரண்மனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அர்ஜூனா என்ற யானை இன்று 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்ல உள்ளது. இதற்காக யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாணவேடிக்கை, போலீசாரின் அணிவகுப்பு, நடனம், இசைக்கச்சேரி என களைக்கட்டும் இந்த ஆண்டு தசரா விழாவைக் காண 5 லட்சத்திற்கும் அதி்கமானோர் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் ஜம்பு சவாரி பிற்பகல் 3 மணிக்கு அரண்மனை முன்பு தொடங்க உள்ளது. ஊர்வலத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தொடங்கி வைக்க  உள்ளார். விழாவில் மைசூரு இளவரசர் யதுவீர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ALSO SEE...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dasara festival, Dasara festival in mysore, Mysore

    அடுத்த செய்தி