ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று! வீட்டுச்சிறையிலிருந்து மெகபூபா முஃப்தி

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று! வீட்டுச்சிறையிலிருந்து மெகபூபா முஃப்தி

மெகபூபா முஃப்தி (கோப்புப்படம்)

மெகபூபா முஃப்தி (கோப்புப்படம்)

'ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்'.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களுள் முக்கியமானவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரண் ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த ஜம்மு காஷ்மீரில் இன்று நிலவும் அடக்குமுறை கணக்கில் அடங்கா நிலையில் உள்ளது. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதைக் கொண்டாட்டமாகப் பார்க்கும் பலருக்கும் இதனது விளைவுகள் இன்னும் புரியவில்லை. இந்திய அரசியல் சாசனம் மாற்றப்பட்ட இத்தினம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்றும் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வதால் என்ன மாற்றம் ஏற்படும்?

Published by:Rahini M
First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Kashmir