முகப்பு /செய்தி /இந்தியா / டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நடன மாஸ்டர் தினமும் தன்னை நடன பள்ளியில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக ஒரு மாணவி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Last Updated :

தன்னிடம் நடனம் பயில வந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்துக் கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக மிரட்டி பணம் பறித்து வந்த டான்ஸ் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவருடைய மொபையில் இருந்து ஏராளமான செக்ஸ் வீடியோக்களும், அந்தரங்க புகைப்படங்களும் அடங்கிய மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் தபெளி பகுதியில் அர்பன் டான்ஸ் அகாடமி என்ற பிரபல நடனப் பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ஆர்யன் சோனியிடம், மைனர் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் நடனம் கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு நடனம் பயின்றுவந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து திடீரென பணம் மாயமானது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து டான்ஸ் மாஸ்டர் பாலியல் வன்புணர்வு வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டியதால் அவருக்காக தாயின் அக்கவுண்டில் இருந்து சிறுமி பணம் பறிமாற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் டான்ஸ் மாஸ்டர் ஆர்யன் இவ்வாறு சிறுமிகள், பெண்களை பலாத்காரம் செய்து செக்ஸ் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

ஆர்யன் சோனியை கைது செய்த கோவிந்த் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரோகித் திவாரி கூறுகையில், 14 வயது சிறுமியின் தாயார், கான்பூர் சைபர் குற்றப்பிரிவில் தனது வங்கி கணக்கில் இருந்து 19,000 ரூபாய் மாயமானதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த போது ஆர்யன் கான் அச்சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதால் நடன மாஸ்டரின் நண்பரின் கணக்குக்கு சிறுமி தனது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிமாற்றம் செய்துள்ளார்.

மாஸ்டர் ஆர்யன் கானின் மொபைலில் 14 சிறுமிகள் மற்றும் பல பெண்களின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் உள்ளன. மொபைலை பறிமுதல் செய்துள்ளோம்.

Also read:  மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. போலீசில் புகார் கொடுத்த மகள்

நடனப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் அங்கு நடனம் பயின்ற 3 மாணவிகளை ஆர்யன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஒரு மாணவி கூறுகையில் ஆர்யன் தினமும் தன்னை நடன பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த நடனப் பள்ளியில் இருந்து நடனம் கற்பதை நிறுத்திவிடலாம் என நினைத்த போதிலும் ஆர்யன் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

Also read: கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதல் கணவனை கொன்று உடலை ட்ரம்மில் அடைத்து வைத்த கொடூரம்

top videos

    நடன மாஸ்டர் ஆர்யன் சோனி மீது போக்சோ, ஐடி மற்றும் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: Pocso, POCSO case, Sexual harassment