ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலித் பெண்ணின் சடலம் சமாஜ்வாதி முன்னாள் அமைச்சர் வயலில் கண்டெடுப்பு- உ.பி. அரசியலில் பரபரப்பு

தலித் பெண்ணின் சடலம் சமாஜ்வாதி முன்னாள் அமைச்சர் வயலில் கண்டெடுப்பு- உ.பி. அரசியலில் பரபரப்பு

தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம்.

தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம்.

உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன 22 வயது தலித் பெண்ணின் சடலம், அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் வயலில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது சமாஜ்வாதி கட்சி பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன 22 வயது தலித் பெண்ணின் சடலம், அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் வயலில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது சமாஜ்வாதி கட்சி பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

  உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மத்தியில், அகிலேஷ் யாதவ் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் சொத்தில் காணாமல் போன தலித் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அம்மாநில அரசியலில் சூடுபிடித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீது பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் கடுமையாகப் பாய்ந்துள்ளன.

  பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவரது கழுத்து எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது.  தலித் பெண் காணாமல் போய்ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது தாயார் அலையாத இடம் இல்லை, புகார் தெரிவிக்காத நபர்கள் இல்லை. அங்கும் இங்கும் ஓடி அலைந்தார், ஆனால் அவருக்கு நீதி கிடைக்கவில்லை, இந்நிலையில் , இறுதியாக வியாழன் அன்று உன்னாவ்வில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஃபதே பகதூர் சிங்கின் மகன் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

  மாநில முன்னாள் அமைச்சரின் மகன் ராஜோல் சிங்குக்குச் சொந்தமான ஆசிரமம் அருகே 22 வயது தலித் பெண்ணின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. சிதைந்த உடல், போர்வையால் சுற்றப்பட்டு, கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட கொடுமையான நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

  இந்த சம்பவத்திற்கு பதிலளித்த உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளை பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார்.

  அவர் தன் ட்விட்டர் பதிவில், அகிலேஷ் யாதவ் ஜி, சமாஜ்வாதி தலைவரின் வயலில் ஒரு தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தாயார் உங்கள் கார் முன் மன்றாடிக் கொண்டிருந்தார், ஆனால் நீங்கள் அவரது பேச்சைக் கேட்காமல் குற்றவாளியைப் பாதுகாத்தீர்கள்.  நீங்கள் அனைத்து குற்றங்களையும் மன்னிப்பீர்கள், மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வேலையையும் செய்வீர்கள் என்று சாடியுள்ளார்.

  பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன் ட்விட்டரில், “உன்னாவ் மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஒருவரின் வயலில் தலித் சிறுமியின் புதைக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்டது மிகவும் வேதனையானது மற்றும் தீவிரமான விஷயம். சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்பி தலைவர் மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது. மாநில அரசு உடனடியாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dalit, Samajwadi party, Uttar pradesh