தலித் மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது...! கட்சியிலிருந்து விலகிய எம்.பி. காட்டம்

Web Desk | news18
Updated: December 6, 2018, 7:47 PM IST
தலித் மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது...! கட்சியிலிருந்து விலகிய எம்.பி. காட்டம்
பா.ஜ.க எம்.பி சாவித்ரி பாய் பூலே
Web Desk | news18
Updated: December 6, 2018, 7:47 PM IST
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் பாஜக எம்.பி சாவித்ரி பாய் பூலே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.  பாஜகவையும் யோகி ஆதித்யநாத்தையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளான இன்று, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி சாவித்ரி பாய் பூலே அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். கட்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய அவர், ‘இன்றிலிருந்து பாஜகவுக்காக நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் தலித்தாக இருப்பதால் பாஜகவில் என்னுடைய குரல் நிராகரிக்கப்பட்டது. அங்கே, தலித்துகளுக்கு எதிராகவும்  அவர்களது உரிமைகளுக்கு எதிராகவும் பெரும் சதி நடைபெறுகிறது.

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மெதுவாக நீக்கப்படும். அரசியல் சாசனத்துக்காக தொடர்ச்சியாக நான் போராடுவேன். மேலும் ஜனவரி 23-ம் தேதி லக்னோவில் மிகப்பெரும் பேரணி நடத்தப்போகிறேன். எம்.பி பதவியின் காலம் முடியும்வரை தொடர்வேன். யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று குறிப்பிடுகிறார். ஹனுமன் தலித்தாக இருந்ததால்தான் ராமன், அவரை குரங்காகப் படைத்தார். யோகி ஆதித்யநாத்துக்கு, உண்மையில் தலித் மக்களைப் பிடித்திருந்தால், அவர் ஹனுமனை விரும்புவதை விட தலித் மக்களை விரும்ப வேண்டும். யோகி எப்போதாவது தலித் மக்களைத் தழுவி இருக்கிறாரா?

அவர், தலித் மக்களின் வீடுகளில் உணவு உண்டிருக்கலாம். ஆனால், சமைத்தவர் தலித்தாக இருந்தது அல்ல. அவர்கள், தலித் மக்களின் வாக்கை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். தற்போது தலித், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் அவர்களின் செயல்பாடுகளை புரிந்துள்ளனர். யோகி ஆதித்யநாத் குறிப்பிடுவதைப் போல ஹனுமன் தலித்தாக இருந்தால், நாடு முழுவதுமுள்ள ஹனுமன் கோயில்களில் பூசாரிகளாக தலித்துகளை நிர்ணயிக்க வேண்டும். ஹனுமன் எப்போதும் ராமனுக்காக நின்றார். ஆனால், ராமன் ஏன் ஹனுமாருக்கு வாலும், முகத்தில் கருப்பும் வழங்கினார்.

பக்தியின் காரணமாக ராமருக்கு தேவையான எல்லாவற்றையும் ஹனுமார் செய்துள்ளபோது, அவர் மனிதராக மாற்றப்பட்டிருக்கவேண்டும். அந்த நேரத்திலேயே தலித்தாக இருந்ததால் ஹனுமார் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார். பா.ஜ.க எம்பியின் இத்தகைய பேச்சு உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்