சிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை! பஞ்சாபில் நடந்த கொடூரம்

என்னுடைய கணவருக்கும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு, பிந்தேர் என்பவர்களுக்கும் இடையே கடந்த அக்டோபர் 21-ம் தேதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னை அப்போதே பேசித் தீர்க்கப்பட்டது.

சிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை! பஞ்சாபில் நடந்த கொடூரம்
கொலை செய்யப்பட்ட தலித்
  • News18
  • Last Updated: November 17, 2019, 5:41 PM IST
  • Share this:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கி சிறுநீரை கட்டாயப்படுத்தி குடிக்கவைத்துள்ளனர். அவர், நேற்று உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலி வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்மாலே சிங். பத்து நாள்களுக்கு முன்னர் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் ஜக்மாலே அளித்த வாக்குமூலத்தில், ‘நவம்பர் 7-ம் தேதி என்னை ரிங்குவின் வீட்டுக்கு அடித்து இழுத்துச் சென்றனர். ஒரு கம்பத்தில் மூன்று மணி நேரம் கட்டிவைத்திருந்தனர். பிந்தேர் என்பவர் கையில் கம்பியை வைத்திருந்தார். ரிங்கு என்னுடைய கையை இறுக்கமாக பிடித்துகொண்டார். அப்போது அவருடைய அப்பா அமர்ஜீத் கையில் கம்பியை எடுத்துவந்தார். பின்னர், அவர்கள் இரக்கமில்லாமல் என்னைத் தாக்கினர். நான், ரிங்குவிடம் தண்ணீர் கேட்டேன். அவன், சிறுநீரைக் கொண்டுவந்து என்னைக் கட்டாயப்படுத்தி குடிக்கவைத்தான்’ என்று தெரிவித்துள்ளார்.


ஜக்மாலே உயிரிழந்தது குறித்து தெரிவித்த அவரது மனைவி மஞ்சீத் கவுர், ‘என்னுடைய கணவருக்கும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு, பிந்தேர் என்பவர்களுக்கும் இடையே கடந்த அக்டோபர் 21-ம் தேதி கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னை அப்போதே பேசித் தீர்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் 7-ம் தேதி என்னுடைய கணவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘இந்தச் சம்பவம் தொடர்பாக நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

Also see:

 
First published: November 17, 2019, 5:41 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading