• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மாணவியின் ஆடைகளை அவிழ்க்க செய்து சோதனை செய்த ஆசிரியர் - சாதி பாகுபாடு காரணமா?

மாணவியின் ஆடைகளை அவிழ்க்க செய்து சோதனை செய்த ஆசிரியர் - சாதி பாகுபாடு காரணமா?

Representational image

Representational image

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியின் மேல்சட்டையை கழற்றச் செய்து சோதித்திருக்கிறார். பின்னர் எதுவும் கிடைக்காததால், கால்சட்டையையும் கழற்றச் சொல்லியிருக்கிறார்.

  • Share this:
15 வயதாகும் மாணவி ஒருவரின் ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி மொபைல் இருக்கிறதா என ஆசிரியர் ஒருவர் சோதனை செய்த விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது. ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டி அவமதித்து வருவதாக மாணவியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூ பள்ளியின் மாணவி அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த செப்டம்பர் 23ம் தேதி பள்ளியில் தேர்வு எழுத சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது குறித்து மாணவி அனிதாவின் தாயார் தி நியூஸ் மினிட் தளத்துக்கு அளித்த தகவலின்படி, அன்றைய தினம் பள்ளியில் தேர்வு நடந்த நிலையில் மாணவி அனிதாவுக்கு மாதவிடாய் என்பதால் தேர்வுக்கு இடையே இரண்டொரு முறை கழிப்பறைக்கு சென்று வந்திருக்கிறார்.

ஆனால் மாணவி அனிதா தேர்வில் காப்பி அடிப்பதாக கருதிய வகுப்பு ஆசிரியர் சந்தேகித்து அம்மாணவியை ஆசிரியர்களின் அறைக்கு வரச்சொல்லி இருக்கிறார். அங்குள்ள கழிவறைக்கு மாணவியையும், சுகாதார பணியாளர் (ஆயா) ஒருவரையும் அழைத்துச் சென்று, அனிதா தன்னிடம் மொபைல் போன் மறைத்து வைத்துள்ளாரா என சோதனை செய்திருக்கிறார். மேலும் அவருடைய மேல்சட்டையை கழற்றச் செய்து சோதித்திருக்கிறார். பின்னர் எதுவும் கிடைக்காததால், கால்சட்டையையும் கழற்றச் சொல்லியிருக்கிறார். ஆனால் மாணவி இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை திட்டி வற்புறுத்தி ஆடையை கழற்றச் செய்து சோதித்துப் பார்த்திருக்கிறார்.

Also read:  சீனாவில் ஒரு ‘பரோட்டா சூரி’ சம்பவம்... பஃபேயில் அதிகம் சாப்பிட்டதால் மிரண்டு போன பிரபல உணவகம்..

மாணவி இது குறித்து தனது தாயாரிடம் அன்றைய தினம் தெரிவித்ததன் பேரில் மறுதினமான செப் 24 அன்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்ததுடன், ஏற்கனவே உங்கள் மகள் இது போல தேர்வில் காப்பி அடித்திருக்கிறார் என அவர் மீதே புகார் தெரிவித்து, மேற்கொண்டு என் நேரத்தை வீணடிக்காமல் கிளம்பிச் செல்லுங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னர் காவல்நிலையத்திலும், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திலும், பாதிப்புக்குள்ளான மாணவி தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also read:   பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இனி பாகிஸ்தானில் புதிய தண்டனை - எதிர்கட்சியினர் கண்டனம்.

இது குறித்து மாணவியின் தாயார் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை பிற மாணவிகளை வேறுவிதமாகவும், என் மகளை தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு காட்டி பிற மாணவர்கள் முன்னிலையில் அவமதிப்பதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளார். ஆன்லைன் வகுப்பில் கூட நெட்வொர்க் கிடைக்காமல் மொபைல் வீடியோ கட் ஆனால், அந்த ஆசிரியர் என் மகளை வசைபாடுவார். இதுவே பிற மாணவர்கள் என்றால் மேம்போக்காக கூறிவந்ந்துள்ளார். இது போல சாதி பாகுபாடு காட்டப்படுவதால் என் மகளின் மனதில் காலத்திற்கும் இது ஆறாத வடுவாக நிலைத்திருக்கும், வருங்காலத்தில் இது போல ஆசிரியர்கள் செயல்பாடு இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த விவகாரம் குறித்து போலீசார் மட்டுமல்லாது பிற அமைப்புகளிலும் புகார் அளித்ததாக தெரிவித்தார் மாணவியின் தாயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: