• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!

பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் அவனது பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும், கோவிலை சுத்தம் செய்ய ரூ. 10,000 என மொத்தம் ரூ. 35,000 அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • Share this:
    கர்நாடக மாநிலத்தில் பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததையடுத்து அவனது பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்திற்குட்பட்டது மியாபுரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பட்டியலின சமூகத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது  4வயது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 4ம் தேதி கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வழிபாடு செய்துள்ளார். 





    கோயிலுக்கு வெளியே நின்று மகனுக்காக  அவர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, அவரது மகன்  கோவிலுக்குள் சென்று உள்ளான். இதை பார்த்த கோவில் அர்ச்சகர் மற்றும் கிராமத்தின் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள்  உடனடியாக கிராம கூட்டத்தை கூட்டியுள்ளனர். கூட்டத்தில் சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும், கோவிலை சுத்தம் செய்ய ரூ. 10,000 என மொத்தம் ரூ. 35,000 அபராதம் விதிக்கப்பட்டது.



    அபராதத் தொகை கட்ட பணம் இல்லாததால் பாதிக்கப்பட்ட  குடும்பத்தினர் தங்களின் சமூகத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் மூலம் போலீசாருக்கு இந்த சம்பவம் தெரியவந்தது.  எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.




    எனினும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரா தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற தீண்டாமை செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள்  கிராம மக்களை எச்சரித்தனர்.




    இதேபோல், தங்கள் சமூகத்தினர் செய்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த மாற்று சமூகத்தினர், பாதிக்கப்பட்ட  பட்டினலின சமூகத்தினரிடமும் மன்னிப்பு கோரினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: