ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியை அடிக்கடி உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. மூவர் சுட்டுக்கொலை - கணவன் வெறிச்செயல்

மனைவியை அடிக்கடி உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. மூவர் சுட்டுக்கொலை - கணவன் வெறிச்செயல்

குடும்ப தகராறில் பெற்றோர் மகன் சுட்டுக்கொலை

குடும்ப தகராறில் பெற்றோர் மகன் சுட்டுக்கொலை

இந்த கொலை சம்பவத்திற்கு மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Damoh, India

  மத்திய பிரதேச மாநிலத்தில் ஜெகதீஷ் படேல் என்ற நபர் தனது மனைவியை உற்றுப் பார்த்து பின்தொடர்ந்து தொல்லை செய்ததாகக் கூறி வாலிபர் மற்றும் பெற்றோரை சுட்டுக்கொன்றுள்ளார்.

  மத்திய பிரதேச மாநிலம் தமோஹ் மாவட்டத்தின் தேவ்ரான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல். இதே கிராமத்தில் வசித்து வரும் 32 வயதான மனக் அஹிர்வாருக்கும் ஜெகதீஷ் படேலுக்கும் குடும்பத் தகராறு இருந்துள்ளது. மனக், ஜெகதீஷ் மனைவியை அடிக்கடி உற்றுப்பார்த்து பின்தொடர்ந்து சீண்டி வருவதாக இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் கிராமவாசிகள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

  இருப்பினும், ஆத்திரம் தீராத ஜெகதீஷ் படேல் கடந்த செவ்வாய்கிழமை அன்று மனக் வீட்டிற்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேரை அழைத்துச் சென்று சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தில் மனக், அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

  இதில் மனக் மற்றும் அவரது பெற்றோர் கமாந்தி மற்றும் ராஜ்பியாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மனக்கின் சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: தூக்கு போட முயற்சித்த மனைவி.. தடுக்காமல் கூலாக வீடியோ எடுத்த கணவர் கைது.. உபியில் அதிர்ச்சி

  இந்நிலையில், ஜெகதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகதீஷை காவல்துறை கைது செய்த நிலையில், மீதமுள்ள நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து துரிதமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Dalit, Family fight, Madhya pradesh, Mayawati, Murder