தலித் தம்பதியினர் மைனர் மகளுடன் மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்!

மாதிரிப்படம்

மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் தாயையும், சிறுமியையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

  • Share this:
தலித் தம்பதியரையும், அவர்களின் மைனர் வயது மகளையும் சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆனது, அதில் தலித் தம்பதியர் மற்றும் அவர்களின் மைனர் சிறுமி ஆகியோரை மரத்தில் கட்டி வைத்து சிலர் அடிக்கின்றனர். இதன் பின்னர் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் தாயையும், சிறுமியையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்ததாக தெரியவந்தது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரான விஜய் சம்ப்லா, இது குறித்து பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read:  சீனாவுடன் நட்புக்கு பாகிஸ்தானுக்கு உதவப்போகும் கழுதைகள்!

தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பில் பஞ்சாப் தலைமைச் செயலாளர், டிஜிபி, பெரோஸ்புர் ஐஜி, பெரோஸ்புர் துணை ஆணையர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசுத் துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை அஞ்சல் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் அறிக்கை அனுப்பப்படாவிட்டால், 338வது அரசியலமைப்பு விதியின்படி சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆணையத்தின் டெல்லி தலைமையகத்துக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்புவோம் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: