முகப்பு /செய்தி /இந்தியா / பானையில் இருந்த தண்ணீரை குடித்ததற்காக தலித் சிறுவன் அடித்து கொலை.. ஆசிரியர் கைது

பானையில் இருந்த தண்ணீரை குடித்ததற்காக தலித் சிறுவன் அடித்து கொலை.. ஆசிரியர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறுவன் மீது தாக்குதல் நடத்திய 40 வயதான ஆசிரியர் சயில் சிங், கொலை மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தானில் தனியார் பள்ளி ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்ததற்காக ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் சுரானா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் இந்திரா மேக்வால். தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இந்த சிறுவன் கடந்த ஜூலை 20ஆம் தேதி பள்ளியில் உள்ள குடிநீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதை அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் சயில் சிங் பார்த்த நிலையில், தலித் சிறுவன் பானையில் இருந்து நீர் எடுத்து குடித்தான் என்ற காரணத்திற்காகவே அவனை கடுமையாக தாக்கி அடித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் 9 வயது சிறுவன் நிலை குலைந்து மயங்கி விழுந்துள்ளார். தாக்குதலில் சிறுவனின் முகம், காது, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் அந்த சிறுவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயத்பூர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கிருந்து அவர் அகமதாபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கும் அந்த சிறுவன் உடல் நலம் தேராத நிலையில் நேற்று தாக்குதலுக்கு ஆளான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்வுத் தாளில் ₹500 லஞ்சம் வைத்த 12ம் வகுப்பு மாணவன் - ஒரு வருடம் தேர்வு எழுதத் தடை

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய 40 வயதான ஆசிரியர் சயில் சிங், கொலை மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் மற்றும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து நீதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் மாநில எஸ்சி கமிஷன் தலைவர் கிலாடி லால் பைர்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

First published:

Tags: Dalit, Rajasthan, School boy