முகப்பு /செய்தி /இந்தியா / ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும்பனி - ஏரிகள் பனிக்கட்டியாக உறைந்தன

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும்பனி - ஏரிகள் பனிக்கட்டியாக உறைந்தன

1893ம் ஆண்டு மைனஸ் 14.4 டிகிரி பதிவாகியிருந்ததே இதுவரையில் ஸ்ரீநகரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1893ம் ஆண்டு மைனஸ் 14.4 டிகிரி பதிவாகியிருந்ததே இதுவரையில் ஸ்ரீநகரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1893ம் ஆண்டு மைனஸ் 14.4 டிகிரி பதிவாகியிருந்ததே இதுவரையில் ஸ்ரீநகரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 India
  • 1-MIN READ
  • Last Updated :

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பநிலை மிகவும் குறைந்திருப்பதன் காரணமாக அங்கு புகழ்பெற்ற தால் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் பெரும்பாலும் உறைந்துள்ளன.

இன்று மைனஸ் 8.4 டிகிரி வெப்பநிலை ஸ்ரீநகரில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த 1995ம் ஆண்டு ஸ்ரீநகரில் மைனஸ் 8.3 டிகிரி பதிவானது, 1991ம் ஆண்டு மைனஸ் 11.3 டிகிரி பதிவாகியிருந்தது. 1893ம் ஆண்டு மைனஸ் 14.4 டிகிரி பதிவாகியிருந்ததே இதுவரையில் ஸ்ரீநகரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தாண்டு ஸ்ரீநகர் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை மைனஸில் பதிவாகி வருகிறது. அங்கு கடும் குளிர் சீதோஷ்னம் நிலவி வருகிறது. வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் பேஸ் கேம்பாக செயல்படும் தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்கம் ரிசார்ட் பகுதியில் மைனஸ் 11.7 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இதுவே ஜம்மு காஷ்மீரின் குறைந்தபட்ச வெப்பநிலையாக உள்ளது.

முந்தைய நாட்களில் மைனஸ் 7 மற்றும் மைனஸ் 10 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

வெப்பநிலை மைனஸ் நிலைக்கு சென்றதையடுத்து காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தால் ஏரியின் பெரும்பகுதி உறைந்து காணப்படுகிறது. மேலும் வீடுகளுக்கான தண்ணீர் சப்ளை லைன்களிலும் தண்ணீர் உறைந்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பனிப்பொழிவும் ஏற்பட்டு வருகிறது.

காஷ்மீரில் தற்போது ’Chillai-Kalan’ எனப்படும் 40 நாட்கள் கடும் பனிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 21ம் தொடங்கிய கடும் பனிக்காலம் ஜனவரி 31ம் தேதி தான் முடிவடைய உள்ளது. அங்கு பல இடங்களில் பனிப்பொழிவு இருப்பதாலும், சாலைகளில் ஐஸ்கட்டிகளாக உறைந்திருப்பதாலும் வாகன ஓட்டிகள் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

First published:

Tags: Jammu and Kashmir