நாட்டில் தினசரி பதிவாகும் புதிய கொரோனா பாதிப்பானது பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குப் பின் குறையத் தொடங்குமென்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்து பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் 3.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல 439 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அளவில் 22,49,335 பேர் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
Also read: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
அதே போல நாட்டில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 17.78%ல் இருந்து 20.75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக கர்நாடகாவில் 50,210 பேரும், மகாராஷ்டிராவில் 40,805 பேரும்., தமிழகத்தில் 30,580 பேரும், டெல்லியில் 9,97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிப்.15ம் தேதிக்குப் பிறகு நாட்டில் புதிய கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் சில மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பானது குறையத் தொடங்கி, கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது.
கொரோனா மூன்றாம் அலையின் அதிதீவிர தாக்கத்தை, கொரோனா தடுப்பூசி குறைத்துள்ளது என்றும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும், அதன்படி, நாட்டில் 74 சதவீத பெரியவர்கள், முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
Also read: துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரேஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.