ஹோம் /நியூஸ் /இந்தியா /

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு... சுகாதாரத்துறை அதிகாரிகள் அலெர்ட்...

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு... சுகாதாரத்துறை அதிகாரிகள் அலெர்ட்...

XE வேரியன்ட் கொரோனா வைரஸ் குறித்து வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

XE வேரியன்ட் கொரோனா வைரஸ் குறித்து வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் நேற்று 0.31 சதவீதத்தில் இருந்து இன்றைக்கு 0.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,542 ஆக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,150 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது ஏறக்குறைய 2 மடங்கு அதிகம் என்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க - குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - ஒரே வாரத்தில் 44 பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பு விகிதம்  நேற்று 0.31 சதவீதத்தில் இருந்து இன்றைக்கு 0.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,542 ஆக உள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கு மட்டும் 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - தவறுதலாக விஷ காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழப்பு...

இந்தியாவின் சில நகரங்களில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஜூன் மாத காலத்தில் நான்காம் அலை பாதிப்பு ஏற்படும் என ஐஐடி ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. நான்காம் அலை குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக வேலூர் சிஎம்சி கல்லூரி பேராசிரியரும் நாட்டின் முன்னணி மைக்ரோ பயாலஜிஸ்டுமான டாக்டர் ககன்தீப் கங்க் நான்காம் அலை குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது "இந்தியாவில் நான்காம் அலை ஏற்படும் என்ற கூற்று தற்போதைய சூழலில் மிகையான ஒன்று. அதேவேளை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

உருமாறிய வைரஸ் பரவல் என்பது இயல்பான ஒன்று தான். வெளிநாடுகளுக்கு மக்கள் சென்று வரும் சூழலில் இதை தவிர்க்க முடியாது. அதேவேளை, XE வகை கொரோனாவைக் கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை. BA.1, BA.2 போன்ற ரகங்களைப் போல XE தொற்று அதிக தீவிரத்தன்மை கொண்ட தொற்று அல்ல. அனைத்து பாதிப்புக்களும் XE வகை எனவும் அச்சம் கொள்ள தேவையில்லை" என்றார்.

First published:

Tags: Corona, Corona spread, Covid-19