‘பாஜக ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய கட்சி அல்ல’ - டி.ராஜா

‘பாஜக ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய கட்சி அல்ல’ - டி.ராஜா

டி. ராஜா

எதிர்கட்சியினரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் பாஜக ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய கட்சி அல்ல எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

 • Share this:
  எதிர்கட்சியினரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் பாஜக ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய கட்சி அல்ல எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

  இது குறித்து புதுச்சேரியில் செய்திளார்களிடம் பேசிய டி.ராஜா, “தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதுச்சேரியில் 144 தடை எதற்காக போடப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

  புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பணம் மற்றும் அதிகார துர்ஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் நேர்மையான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

  மத்திய அரசு மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மோடி அரசை எச்சரிக்கும் தீர்ப்பு. பாஜக பணத்தை வைத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பை நடத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய கட்சி அல்ல. பாஜகவின் பிடியில் இருந்து இந்தியாவையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

  புதுச்சேரியில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்திய பாஜக மீது அதிகபட்ச விசாரணை நடத்த வேண்டும். எதிர்கட்சியினரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.” இவ்வாறு கூறினார்.

  Must Read : ஐடி ரெய்டுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்.. இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது - மு.க.ஸ்டாலின்

   

  தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: