டாடா குழுமத் தலைவர் பதவி! மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த சைரஸ் மிஸ்ட்ரி

சைரஸ் மிஸ்ட்ரி

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி மீண்டும் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

  டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்ட்ரி 2016-ம் ஆண்டு அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டப் பிறகு, சந்திரசேகர் டாடா குழுமத்தின் தலைவரா நியமிக்கப்பட்டார். அதனைஎதிர்த்து, சைரஸ் மிஸ்ட்ரி நிறுவனங்களுக்கான தேசிய சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார்.

  இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வாதிட்ட டாடா குழுமம், ‘வாரிய உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்தால் மிஸ்த்ரியை நீக்குவதற்கு டாடா நிர்வாக கமிட்டிக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தது. இந்த வாதத்தை தேசிய தீர்ப்பாயத்தின் மும்பை கிளை ஏற்றுக் கொள்ளவில்லை.. அதனையடுத்து, டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரனை நியமித்தது செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும், டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி தொடர்வார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் உடனடியாக பொறுப்பேற்க முடியாது. மேல்முறையீடு செய்வதற்கு டாடா குழுமத்துக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: