• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Cyclone Yass | அதிதீவிர புயலான யாஸ் இன்று ஒடிஷா-மேற்குவங்கம் இடையே கரையை கடக்கிறது

Cyclone Yass | அதிதீவிர புயலான யாஸ் இன்று ஒடிஷா-மேற்குவங்கம் இடையே கரையை கடக்கிறது

யாஸ் புயல்

யாஸ் புயல்

அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ள யாஸ் புயல் ஒடிஷா அருகே கரையை நெருங்கி வருகிறது

  • Last Updated :
  • Share this:
    கிழக்கு மற்றும் மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று கடந்த திங்களன்று மண்டலமாகவும் பின்னர் யாஸ் புயலாகவும் மாறியது. நேற்று தீவிர புயலாக மாறிய யாஸ் புயல், நேற்று மாலைக்கு மேல் அதிதீவிர புயலாக உருவானது. யாஸ் புயல் காரணமாக ஒடிஷா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரு மாநிலங்களில் 11லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஒடிசாவுக்கும், மேற்குவங்கத்துக்கும் இடையே மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் அதிகாலையில் பயணித்தது. வடக்கு ஒடிஷா கடற்கரைக்கும், தம்ரா துறைமுகத்துக்கும் இடையே புயல் நெருங்கி வருகிறது.

    இந்த புயல் இன்று மதியத்திற்குள் வடக்கு ஒடிஷா மற்றும் பாலசோர் மாவட்டங்களுக்கு நடுவே முழுமையாக கடந்து செல்ல இருக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 165 கிலோமீட்டர் வேகமும், சில நேரங்களில் 185 கிலோமீட்டர் வேகம் கூட காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    Also Read : ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்

    பாரதீப் கடற்கரையில் அதிவேகமாக காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது. ஒடிஷா மாநிலம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் கடந்து சென்றதும் கரையோர மக்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை கப்பல்களும், மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்,.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: