வாயு புயல் காரணமாக 110 விரைவு ரயில்கள் ரத்து...!

குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 13, 2019, 8:49 AM IST
வாயு புயல் காரணமாக 110 விரைவு ரயில்கள் ரத்து...!
வாயு புயல்
Web Desk | news18
Updated: June 13, 2019, 8:49 AM IST
அரபிக்கடலில் உருவான அதிதீவிர வாயு புயல் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான வாயு புயல் நகர்வில் நேற்று இரவில் திடீரென வேகம் அதிகரித்தது. இதனால் மிக அதி தீவிர புயலாக வாயு புயல் சீற்றம் அடைந்தது. குஜராத் மாநிலத்தின் வெரவாள் மற்றும் டவார்க்கா இடையே மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்க உள்ளது.

புயல் கரையை கடந்த பிறகும் 24 மணிநேரத்துக்கு அதன் தாக்கம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மீட்புக் குழுக்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், ஜூனாகத், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட் உள்பட 10 கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருப்பதால் அங்கு மழை பெய்து வருகிறது. அகமதாபாத்தில் இருந்து போர்பந்தர், டையூ, காண்ட்லா, முந்த்ரா மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Rail, ரயில்,
ரயில்கள் ரத்து


போர்பந்தர், காந்திதாம், பாவ்நகர், புஜ் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்லும் 110 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் முக்கிய துறைமுகமான காண்ட்லா துறைமுகம் மூடப்பட்டுள்ளது.புயல் நகர்ந்து வருவதை உன்னிப்பாக கவனித்து வரும் குஜராத் அரசு, 500 கடலோர கிராமங்களில் வசித்த 3 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பு இடங்களில் தங்க வைத்துள்ளது. குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வாயு புயல் காரணமாக மகாராஷ்ட்ராவில் நேற்று பல இடங்களில் பலத்த காற்று வீசியது. அப்போது சர்ச்கேட் ரயில் நிலையத்தில் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு பயணிகள் மேல் விழுந்தது. இதில் மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காற்று வீசுவதால் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர், டையூ, பாவாநகர், கேஷோத் மற்றும் கண்டலா ஆகிய நகரங்களில் நேற்று இரவு நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Also see... கம்பேக் நாயகர்கள்... அஜித், விஜய் வளர்ந்த கதை!

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...