ஹோம் /நியூஸ் /இந்தியா /

Cyclone Sitrang: அதிதீவிர புயலாக வலுபெறும் சித்ரங் புயல்... நாளை கரையை கடக்கிறது

Cyclone Sitrang: அதிதீவிர புயலாக வலுபெறும் சித்ரங் புயல்... நாளை கரையை கடக்கிறது

மாதிரி படம்

மாதிரி படம்

அடுத்த 12 மணி நேரத்தில் சித்ரங் புயல் அதி தீவிர புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal | Odisha (Orissa)

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில அதி தீவிர புயலாக வலுபெறும் என்றும் வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், சாகர் தீவில் இருந்து தெற்கு பகுதியில் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் பரிசாலில் இருந்து தெற்கு - தென்மேற்கு திசையில் 670 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

    அடுத்த 12 மணி நேரத்தில் சித்ரங் புயல் அதி தீவிர புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் சிட்ரங் புயல் வங்கதேச கடல் பகுதியில் திங்கோனா தீவு மற்றும் சந்த்விப் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

    புயல் காரணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் அக்டோபர் மாதத்தில்  வங்க கடலில் உருவாகியுள்ள முதல் புயல் சித்ரங் ஆகும். இந்த புயல் காரணமாக அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய வடக்கிழக்கு மாநிலங்களில் கனமழையும், மிசோரம் மற்றும் திரிபுராவில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Cyclone, Heavy rain, Indian meteorological department