ஃபோனி புயல் - தூக்கி வீசப்படும் எய்ம்ஸ் விடுதியின் மேற்கூரை... வைரலாகும் வீடியோ...!

#FaniCyclone | #Odisha | புயலின் மையப்பகுதி புரியில் கரையை கடக்கும் போது மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

ஃபோனி புயல் - தூக்கி வீசப்படும் எய்ம்ஸ் விடுதியின் மேற்கூரை... வைரலாகும் வீடியோ...!
ஃபோனி புயலால் தூக்கிவீசப்படும் மேற்கூரை
  • News18
  • Last Updated: May 3, 2019, 4:38 PM IST
  • Share this:
ஃபோனி புயல், மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் ஒடிசா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்தது. கனமழை மற்றும் கடும் காற்றால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபோனி புயல் இன்று காலை 8 மணி முதல் ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது. ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே காலை 8 மணியளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 185 முதல் 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

கடற்கரையோரங்களில் உள்ள விடுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. பின்னர் 11 மணி அளவில் புயல் கரையைக் கடந்தது. அப்போது புரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. புயலின் மையப்பகுதி புரியில் கரையை கடக்கும் போது மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
ஃபோனி புயலின் கோரதாண்டவத்தின் போது புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி விடுதியின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓடிசாவின் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் அடியோடு சாய்ந்து உள்ளன.

Also Read : பலத்த சேதத்தை ஏற்படுத்திய ஃபோனி புயல்

ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் புயல் உருவாகியிருப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். 1999-ஆம் ஆண்டுக்குப் பின் வங்கக்கடலில் வீசும் மிகமோசமான புயலாக ஃபோனி உள்ளது.

கரையை கடக்கும் ஃபோனி புயல் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்துவருகிறது. ஆந்திராவிலும் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

Also Watch

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading