Home /News /national /

’பவன்’ புயலால் இந்தியாவுக்கான மழை வாய்ப்பு என்ன?

’பவன்’ புயலால் இந்தியாவுக்கான மழை வாய்ப்பு என்ன?

கோப்புப்படம்

கோப்புப்படம்

கடலோரங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆப்ரிக்காவை ஒட்டி அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘பவன்’ புயலால் இந்தியாவில் குஜராத்தை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள பவன் புயலால் குஜராத் மாநிலத்துக்கு கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் இருப்பதால் அப்ப்குதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    குஜராத் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சோமாலியா பகுதியைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரபிக்கடலோரப் பகுதிகளில் இப்புயலின் தாக்கத்தால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி மோசமான வானிலை காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பார்க்க: பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!
    Published by:Rahini M
    First published:

    Tags: Cyclone

    அடுத்த செய்தி