Cyclone Nivar | நிவர் புயல் காரணமாக திருப்பதி திருமலையில் நேற்று இரவு முதல் தொடர்மழை.. அணைகள் நிரம்பியது..
Cyclone Nivar | நிவர் புயல் காரணமாக திருப்பதி திருமலையில் நேற்று இரவு முதல் தொடர்மழை.. அணைகள் நிரம்பியது..
திருப்பதி-நிவர் புயல்
தொடர் மழை காரணமாக திருப்பதி மலைக்கு சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதில் பெரும் சிரமங்களை வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணத்தால் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், திருப்பதி திருமலையில் அணைகள் நிரம்பி வழிகின்றன.
நிவர் புயல் காரணமாக நேற்று இரவு முதல் திருப்பதி, திருமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருப்பதி மலையில் உள்ள பாபவிநாசம், கோகர்பம், ஆகாச கங்கை, ஜாபாலி ஆகிய அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே திருமலையில் உள்ள அணைகளில் இருந்தும் இன்று காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உபரி நீர் வெளியேற்றம் நடைபெறுகிறது.
இதனால் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபில தீர்த்தம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர் மழை காரணமாக திருப்பதி மலைக்கு சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதில் பெரும் சிரமங்களை வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.