Home /News /national /

வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்?

மழை

மழை

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவத்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. ஜாவத் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவான புயலாக வடக்கு ஆந்திரா, ஒடிசா இடையே நாளை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து நாளை ஒடிசாவிலும், டிசம்பர் 5 ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி , வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரைபடி, சென்னை, காட்டுபள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Also Read : ஒமைக்கரான் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்?

    இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வரும் 5ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி உட்பட 9 மாவட்டங்களிலும், 6ம் தேதி நாமக்கல், திருப்பூர், தேனி உட்பட 6 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமை மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி