முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய மேற்கு வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது

மத்திய மேற்கு வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை, இயல்பை விட  இரண்டிலிருந்து மூன்று  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம்   எச்சரித்துள்ளது.

  • Last Updated :

ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், வரும் 8ம் தேதி  புயல் உருவாகும் என  மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள,  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று  மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது எட்டாம் தேதியன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து,  10ம் தேதியன்று ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என கணிக்கப்பட்டு உள்ளது.  இதன் எதிரொலியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்,  நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில்,  சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்

அதேநேரம், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை, இயல்பை விட  இரண்டிலிருந்து மூன்று  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம்   எச்சரித்துள்ளது. நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி  பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. வேலூரில் 105.98 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

top videos

    தஞ்சை, திருத்தணி,  மதுரை விமான நிலையம், மதுரை நகரம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, தொண்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது.

    First published:

    Tags: Bay of Bengal, Cyclone