ஹோம் /நியூஸ் /இந்தியா /

அச்சுறுத்தும் சித்ராங் புயல்... தீபாவளியன்று வங்க கடல் பகுதியில் உருவாகிறது!

அச்சுறுத்தும் சித்ராங் புயல்... தீபாவளியன்று வங்க கடல் பகுதியில் உருவாகிறது!

புயல்

புயல்

Chitrang cyclone: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் புயல் காற்று மற்றும் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • chennai |

  2022 ஆம் ஆண்டு பருவமழைக்கு பிந்தைய பருவத்தின் முதல் வெப்பமண்டல சூறாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

  வங்காள விரிகுடாவில் கடந்த அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு திட்லி புயலுக்கு பிறகு அக்டோபரில் உருவாகும் முதல் சூறாவளி இதுவாகும். மேலும் இது தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட ‘சித்ராங்’ என்ற பெயரால் அழைக்கப்படும்.

  வங்காள விரிகுடாவில் உருவாகக்கூடிய புயல், அக்டோபர் 25-ம் தேதி மேற்கு வங்கம்-வங்காளதேசம் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  டெங்கு நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விபரீதம்.. போலி ரத்த பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

  வியாழக்கிழமை காலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், அக்டோபர் 24-ம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேலும் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் அது மீண்டும் வடக்கு நோக்கிச் சென்று சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

  அதன்பிறகு, அது நகர்ந்து படிப்படியாக வடக்கு-வடகிழக்கு திசையில் சென்று அக்டோபர் 25-ம் தேதி மேற்கு வங்கம்-வங்காளதேசம் பகுதியில் கரையை கடக்கும் என்று கொல்கத்தாவில் உள்ள ஐஎம்டியின் பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எந்தெந்த மாநிலங்கள் பாதிக்கப்படலாம்?

  IMD இன்னும் சாத்தியமான சூறாவளி பாதையை வெளியிடவில்லை, ஆனால் சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, தற்போதுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து அடுத்த நான்கு நாட்களில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும்.

  முக்கியமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் புயல் காற்று மற்றும் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

  காலநிலை மாற்றத்தால் மாறும் ஆர்க்டிக் கடல்... ஒலிகளை சேகரிக்க கடலுக்குள் ஹைட்ரொபோன்கள்

  70 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,  மாவட்ட ஆட்சியர், தலைமை காவல் அதிகாரிகளுக்கு தீபாவளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்கு மீட்பு பணிக்கான உபகரணங்கள் ,உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.

  மீட்பு பணிகள் குறித்து மம்தா தலைமையில் அவசர கூட்டம் நேத்து தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஒடிசாவிலும் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. கரையோட கிராம மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Cyclone