கரையைக் கடந்தது புல்புல் புயல்... மேற்கு வங்கத்தில் சூறாவளியுடன் கனமழை...!

news18-tamil
Updated: November 10, 2019, 9:13 AM IST
கரையைக் கடந்தது புல்புல் புயல்... மேற்கு வங்கத்தில் சூறாவளியுடன் கனமழை...!
(Image PTI)
news18-tamil
Updated: November 10, 2019, 9:13 AM IST
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புல் புயல் புயல் நேற்றிரவு கரையை கடக்கத் தொடங்கியதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள புல் புல் புயலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாக மையம் கொண்டிருந்த புல் புல் புயல் நேற்றிரவு கடுமையான புயலாக வலுவிழந்தது. புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது.

ஒடிசாவில் புயல் காற்றில் சிக்கி தனித் தீவில் சிக்கிக் கொண்ட எட்டு மீனவர்களை ஒடிசா பேரிடர் அதிவிரைவுப் படையினர் மீட்டனர். புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கேந்திரபரா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் புல் புல் புயலால் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது,


இதுபோல் மேற்கு வங்கத்தில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழைக்கு ஒருவர் உயிரிழந்தார். நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனிடையே இரவு 11 மணி அளவில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்துக்கிடையே 24 பர்கானா மாவட்டம் அருகே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதால் அங்கும் அண்டை மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மணிக்கு 85 கிலோமீட்டர் முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கிழக்கு மித்னாப்பூர் மற்றும் கக்த்வீப் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் மேற்கு வங்கத்தில் புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவினரை அனுப்பவேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து புயல் நிலவரங்களை பார்த்தறிந்த மம்தா, ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Loading...

First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...