ஹோம் /நியூஸ் /இந்தியா /

அசானி தீவிர புயல் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் - இந்திய வானிலை மையம்

அசானி தீவிர புயல் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் - இந்திய வானிலை மையம்

அசானி புயல்

அசானி புயல்

Cyclone Asani | வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு அசானி (Cyclone Asani) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    அசானி புயல் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், புரி கடற்கரையில் இருந்து  தெற்கு, தென்கிழக்கில் 680 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர புயல் செவ்வாய்க்கிழமை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும்  அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Also Read : கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்

    அசானி புயல் தாக்கத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஹவுரா, கொல்கத்தா, ஹூக்ளி, மேற்கு மிதினாபூர் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அசானி புயல் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (மே 09) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Cyclone Asani, Weather News in Tamil