இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட பட்டியல்..

Youtube Video

இந்தியாவில் சைபர் குற்றங்கள் ஒரே ஆண்டில் சுமார் 64 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  2019-ஆம் ஆண்டிற்கான சைபர் குற்றங்கள் குறித்த பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு 27,248 ஆக இருந்த இணைய வழி குற்றங்கள் ஒரே ஆண்டில் 63.5 விழுக்காடு அதிகரித்து 44,546 ஆக உயர்ந்துள்ளது. நகர் பகுதிகளிலேயே அதிகளவு குற்றங்கள் கண்டறியப்பட்டதாகவும், மோசடி தொடர்பான வழக்குகள் மட்டும் ஒரே ஆண்டில் 60 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இணைய வழியாக நடைபெறும் பாலியல் மோசடி, தனிநபர் பழிவாங்கல் போன்ற குற்றங்களும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக கர்நாடகாவும், இதற்கு அடுத்தப்படியாக உத்தரபிரதேசமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் ஒருநாளைக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  மேலூம் படிக்க...பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், தலித்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2018-ஆம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, 26 விழுக்காடு அதிகரித்து உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: