ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் - இல.கணேசன் விடுவிப்பு

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் - இல.கணேசன் விடுவிப்பு

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநர் சிவி போஸ்

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநர் சிவி போஸ்

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பணிக்காலத்தின் போது நன்மதிப்பை பெற்ற அதிகாரியாக போஸ் திகழ்ந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த போஸ் பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் முக்கிய மூளையாக இருந்தவராவார்.

  மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. அம்மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தங்கார் பதவி வகித்து வந்தார். அவருக்கும் மம்தா அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜக்தீப் தங்கார் வேட்பாளாரக தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று துணை குடியரசுத் தலைவராக தற்போது உள்ளார்.

  ஜக்தீப் தங்காருக்கு பின் அம்மாநிலத்தின் ஆளுநராக பணியாற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசனுக்கு வழங்கப்பட்டது. மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இல.கணேசன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வந்தார்.

  இரு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தனது இல்ல விழாவிற்கு இல.கணேசன் மம்தாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். மம்தாவும் இந்த விழாவில் நேரில் பங்கேற்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேவேளை, மம்தா பங்கேற்ற விழாவில் பங்கேற்க விரும்பவில்லை எனக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விழாவை புறக்கணித்தார்.

  இதையும் படிங்க: காசியும் தமிழ்நாடும் ஒன்னுதான்.. ‘காசி தமிழ் சங்கமம்’ குறித்து தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்!

  இந்த பின்னணியில் மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்து இல.கணேசன் விடுவிக்கப்பட்டு, சிவி ஆனந்த போஸை மாநிலத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். மாவட்ட ஆட்சியாராக தனது சிவில் சர்வீஸ் பணிய தொடங்கிய போஸ், மாநில அரசின் தலைமை செயலாளர் பதவி வரை பணிபுரிந்தவர் ஆவார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்ற அதிகாரி இவர். எனவே, போஸ் மேற்கு வங்க அரசுடன் இணக்கமான சூழலை கடைப்பிடிக்கிறாரா அல்லது தங்கார் போல் மோதல் போக்கு தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Ila Ganesan, Mamata banerjee, PM Modi, President Droupadi Murmu