பட்ஜெட்2019: தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும்?

வரி உயர்வால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 வரையும், காய்கறி விலை, பால் விலை, ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளது.

Web Desk | news18
Updated: July 5, 2019, 9:11 PM IST
பட்ஜெட்2019: தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும்?
தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை
Web Desk | news18
Updated: July 5, 2019, 9:11 PM IST
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ள மத்திய அரசு, பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு கூடுதலாக 2 ரூபாய் கூடுதல் வரி விதித்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2-ம் இடம் வகித்து வருகிறது.  சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உள்ளூரிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12 .5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வால் வரும் நாட்களில் பண்டிகை மற்றும் திருமண சீசன், உலகச் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றைச் சார்ந்து 10 கிராம் சுத்தத் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு கூடுதலாக  1 ரூபாய் கலால் வரி விதிக்கப்படும்.

சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேலும் 1 ரூபாய் செஸ் வரியும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், காய்கறி விலை, பால் விலை, ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக் கட்டணமும் உயரும் என கூறப்படுகிறது.

Also watch: வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநாநூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா 

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...