நாசிக் பணம் அச்சடிக்கும் அச்சகத்தில் ரூ. 5 லட்சம் மாயம் - அதிகாரிகள் ஷாக்

பணம்

புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் மாயமானதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்

 • Share this:
  நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தில் இருந்து ரூபாய 5 லட்சம் திருடப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சகத்தின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also Read: திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

  இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், நாசிக் அச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக திங்கள்கிழமை புகார் அளித்தனர். 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர். அனைத்தும் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read: 24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள அச்சகத்தில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது போலீசாரையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்ட வாய்ப்பு இல்லை. அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: