வீட்டில் திருட சென்ற திருடன் அங்கு கிச்சடி சமைத்து மாட்டிக்கொண்ட சுவாரிய சம்பவம் குறித்து அசாம் மாநில போலீசார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
வீடுகளில் திருட சென்ற அங்கேயே தூங்கி மாட்டிய திருடர்கள் உண்டு. இதுபோல், திருட சென்ற வீடுகளில் நூதனமான திருடர்கள் மட்டிக்கொண்ட சம்பவங்கள் பல உள்ளன. அதேபோன்ற சம்பவம் ஒன்றுதான் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடன் ஒருவன் திருட சென்றுள்ளான். அப்போது பசி எடுத்ததோ என்னவோ, திருடாமல் சமையலறைக்கு சென்று கிச்சடு செய்வதில் திருடன் மும்முரமாக இருந்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற கவுகாத்தி போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து அசாம் மாநில போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில், தொடர் கொள்ளையனின் விநோத சம்பவம், கிச்சடியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளபோதிலும், திருட்டு முயற்சியின் போது கிச்சடி சமைப்பது உங்கள் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும். திருடன் சிக்கிக்கொண்டார். கவுகாத்தி போலீசார் அவருக்கு சூடான மீல்ஸ்களை வழங்கி வருகின்றனர்’ என்று பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பணத்திற்காக மனைவிகளை உடலுறவுக்கு பகிரும் விழா... அதிரவைக்கும் சம்பவம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.