முகப்பு /செய்தி /இந்தியா / தென் மாநிலங்களில் பாஜகவுக்கு உட்கட்டமைப்பு வலுவாக இல்லை: தேர்தல் முடிவு குறித்து சிடி ரவி கருத்து

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு உட்கட்டமைப்பு வலுவாக இல்லை: தேர்தல் முடிவு குறித்து சிடி ரவி கருத்து

சிடி ரவி

சிடி ரவி

தென் மாநிலங்களில் கர்நாடகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பாஜகவின் உட்கட்டமைப்பு வலுவாக இல்லை என 5 மாநில தேர்தல் முடிவு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்

  • 1-MIN READ
  • Last Updated :

தென் மாநிலங்களில் கர்நாடகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பாஜகவின் உட்கட்டமைப்பு வலுவாக இல்லை என 5 மாநில தேர்தல் முடிவு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம்,  புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கணிசமாக இடங்களில் முன்னிலையில் உள்ள பாஜக கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நியூஸ் 18 குழுமத்துக்கு பேட்டியளித்த பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக  தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியின் தலைவி ஜெயலலிதா தமிழகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதாகவும்  தற்போது அவர் இல்லாததால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்னிந்தியாவில் கர்நாடகா தவிர பாஜகவுக்கு பெரியளவில் உட்கட்டமைப்பு இல்லை. அதனால், தங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்று கூறிய சிடி ரவி,  எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் புகுத்தவில்லை . தமிழகத்தில் தமிழுக்குத்தான் முன்னுரிமை. ஆனால், எதிரிகள் எங்களுக்கு எதிராக தவறான பிரச்சரத்தை மேற்கொண்டனர். அவர்கள் தற்காலிகமாக வெற்றியடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Election Result, TN Assembly Election 2021