• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்... துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி!

சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்... துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி!

சிஆர்பிஎஃப் முகாமில் துப்பாக்கிச் சூடு

சிஆர்பிஎஃப் முகாமில் துப்பாக்கிச் சூடு

சி-கம்பெனி 50 பட்டாலியன் லிங்காலபள்ளியின் காவலர் ரீத்தேஷ் ரஞ்சன் துப்பாக்கியால் சுட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

  • Share this:
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  (CRPF) வீரர்  சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால்  சுட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலம்  சுக்மா மாவட்டத்தின்  லிங்கம் பள்ளி பகுதியில் நக்ஸலைட் செயல்பாடுகளை ஒடுக்குவதற்காக துணை ராணுவப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை   தங்கியுள்ளனர். இந்நிலையில், பணியில் இருந்து சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் இன்று அதிகாலை 3,25 மணியளவில் சக வீரர்களை நோக்கி தனது ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    இதில் 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பத்ராசலம் பகுதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டிருந்த நபரை சக சிஆர்பிஎஃப் வீரர்கள் மடக்கி பிடித்தனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த துப்பாக்கிக் சூட்டில் ஈடுபட்டவர் சி-கம்பெனி 50 பட்டாலியன் லிங்காலபள்ளியின் காவலர் ரீத்தேஷ் ரஞ்சன் என்று கூறப்படுகிறது. அவர் எதற்காக  சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்பது தொடர்பாக காரணம் எதுவும் தெரியவில்லை.  துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்திற்கு ராணுவத்தின் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை நடத்த சிஆர்பிஎஃப் உத்தரவிட்டுள்ளது .மாநில போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் தன்ஜி, கான்ஸ்டபிள் ரஜிப் மோண்டல் மற்றும் கான்ஸ்டபிள் ராஜ்மணி குமார் யாதவ் ஆகியோரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது.  சிஆர்பிஎஃப் வீரர் சுட்டத்தில் சக சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேர்  உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: