மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ

இயக்குனர் ஜெனரல் இக்பால் சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 1:16 PM IST
மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ
இயக்குனர் ஜெனரல் இக்பால் சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 1:16 PM IST
மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற நாளில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்றவர்தான் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகரில் பணியில் இருந்த போது, தாக்குதல் நடைபெற்ற நாளுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 13-ம் தேதி சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தன்னுடைய உணவை ஊட்டியுள்ளார்.
Loading...அத்துடன் சிறுவன் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீரும் கொடுத்தும், வாயைத் துடைத்துவிட்டு மிகுந்த கனிவோடும் மனித நேயத்தோடும் நடந்துகொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இக்பால் சிங்கிற்கு வாழ்த்துகளும் பாரட்டுகளும் குவிந்து வருகின்றன. இதற்காக இயக்குனர் ஜெனரல் சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

Also see...

Also see... எங்கள ஒன்னும் செய்ய முடியாது - பொது மக்களை மிரட்டும் மணல் கொள்ளையர்கள்

Also see... 
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...