குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம்...!
குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம்...!
பிரதமர் நரேந்திர மோடி
தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காந்திநகரில் உள்ள தஹேகாம் சாலையில் ஊர்வலமாக சென்றார்.
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாவது நாளாக திறந்த வாகனத்தில் மீண்டும் ஊர்வலமாக சென்றார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காந்திநகரில் உள்ள தஹேகாம் சாலையில் ஊர்வலமாக சென்றார்.
சாலையோரம் குவிந்திருந்த பாஜக தொண்டர்களை நோக்கி, வாகனத்தில் இருந்தவாறு வெற்றி சின்னத்தை காட்டியவாறும், கையசைத்தும் பிரதமர் பயணித்தார்.
அவரை வரவேற்று சாலையோரங்களில் பதாகைகள் இடம்பெற, தொண்டர்கள் மலர்தூவி மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
હું લોકોના અપાર સ્નેહ બદલ કૃતજ્ઞ છું. આ પ્રચંડ જન સમર્થન અને ઉત્સાહ અમને જનતા જનાર્દનની સેવામાં કઠોર પરિશ્રમ કરવા માટે પ્રેરણા આપે છે. pic.twitter.com/p6HRyiaKBZ
தொடர்ந்து, காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
#WATCH Gujarat | PM Narendra Modi waves at people during a roadshow in Dahegam in Gandhinagar.
பின்பு அந்த பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு, பிரதமர் மோடி பட்டங்களையும் வழங்கினார், இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் உடனிருந்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.