கேரளாவில் காக்கைக் காய்ச்சல்... கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்...!

வெஸ்ட் நைல் வைரசானது காக்கையிலிருந்து கொசுவுக்கும், பின்பு கொசுவிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

news18
Updated: March 24, 2019, 6:48 PM IST
கேரளாவில் காக்கைக் காய்ச்சல்... கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்...!
காக்கை காய்ச்சல்
news18
Updated: March 24, 2019, 6:48 PM IST
பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள 7 வயது சிறுவனுக்குக் காக்கை காய்ச்சல் தாக்கியுள்ளது.

கேரளாவில் கர்நாடக எல்லையில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுவனை மர்மக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இந்த சிறுவனைக் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ‘வெர்ஸ்ட் நைல் வைரஸ்’ என்ற மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு இந்த வைரஸ் குறித்த தகவலைக் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடாவில் இந்த வரைஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் கர்நாடக சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் “காக்கைக் காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். இந்த காக்கைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வெஸ்ட் நைல் வைரசானது கொசு மூலமே பரவும். இந்த வைரஸ் காக்கை போன்ற பறவைகளிலிருந்து பரவுவதால் காக்கை காய்ச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வெஸ்ட் நைல் வைரசானது காக்கையிலிருந்து கொசுவுக்கும், பின்பு கொசுவிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

காக்கைக் காய்ச்சல் ஒருவரைப் பாதித்தால் 3 முதல் 14 வரை தொடர்ந்து காய்ச்சல் அடிக்கும். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, குமட்டல், வாந்தி, தோல் அழற்சி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த காய்ச்சல் ஒருவரைப் பாதிக்கும் போது நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், கோமா போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

காக்கைக் காய்ச்சலுக்கு இதுவரை எந்த ஒரு மருத்துவ வசதிகளும் வரவில்லை. எந்த அளவிற்கு மனிதனை இது பாதிக்கும் என்றும் தெரியாது. இதில் மனிதர்கள் பாதிக்காத வன்னம் விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தி வருவதாகவும்” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க:
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...