• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தன்னைவிட 13 வயது குறைந்த ஆட்டோ டிரைவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி..

தன்னைவிட 13 வயது குறைந்த ஆட்டோ டிரைவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி..

Auto

Auto

அந்த பெண் பயணம் செய்வதற்காக அடிக்கடி வாடிக்கையாக ஆட்டோ ஒன்றில் சென்று வந்தது தெரியவந்தது.

  • Share this:
தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் கோடீஸ்வரரின் மனைவி மாயமாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் செல்வந்தரான ஒரு கோடீஸ்வரருக்கு மனைவியான 45 வயது பெண்மண்க் தன்னை விட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுனருடன், வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமாகி இருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமாகி விட்டதாக கடந்த அக்டோபர் 13ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து அந்த கோடீஸ்வரரின் மனைவியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய போலீசார், அவரின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் பயணம் செய்வதற்காக அடிக்கடி வாடிக்கையாக ஆட்டோ ஒன்றில் சென்று வந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது அந்த ஆட்டோ ஓட்டுனரும் அதே 13ம் தேதியில் இருந்து மாயமாகி இருந்தது கண்டறியப்பட்டது.

Also read: டிவி லைவ் ஷோவில் சோயிப் அக்தரை வெளியேற சொன்ன நெறியாளர் – வைரல் வீடியோ!

இதனையடுத்து இருவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் இறங்கினர். அந்த ஆட்டோ ஓட்டுனரின் பெயர் இம்ரான் எனவும் அவருக்கு 32 வயது ஆகிறது எனவும், இருவருக்குள்ளும் ரகசியமாக கள்ளத்தொடர்பு இருந்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனரான இம்ரானின் நண்பர் ஒருவரிடம் இருந்து கோடீஸ்வரருக்கு சொந்தமான 33 லட்ச ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் அந்த கோடீஸ்வரரின் மனைவியும், ஆட்டோ ஓட்டுனரும் காந்த்வா, ஜாவ்ரா, உஜ்ஜைன், ரத்லம் என அடிக்கடி தங்களின் இருப்பிடத்தை மாற்றிச் சென்றுள்ளனர். போலீசார் தொடர்ந்து இருவரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இருவரையும் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது.

Also read:   ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுரேஷ் கோபி…?

அந்த கோடீஸ்வரருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது கணவரின் 47 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னை விட 13 வயது குறைவான இளைஞருடன் கோடீஸ்வரரின் மனைவி, ஆட்டோ ஓட்டும் வாலிபருடன் மாயமானது மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: