முகப்பு /செய்தி /இந்தியா / வனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு

வனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு

வனவிலங்குகளால் ஆபத்து

வனவிலங்குகளால் ஆபத்து

வனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் பிரச்னைக்கு காடழிப்பு, பணப்பயிர் மாற்றம், நிலப்பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்ற நிலையில் பல அரசுத் துறைகளும் இணைந்து ஒரே குடையின் கீழ் விவாதித்து இச்சிக்கலை தீர்க்க நீடித்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இந்தியக் காடுகள் குறித்து மத்திய 2019ஆம் ஆண்டு வெளியிட்ட  State of Forest Report அறிக்கையின் படி தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வனப்பரப்பு 26,364 சதுர கிலோமீட்டராகும்.. இது தமிழ்நாட்டின் மொத்த புவிப்பரப்பில் 20.27 விழுக்காடு.  கடந்த 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 83 சதுர கிலோமீட்டர்   வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. காடுகளின் பரப்பரவு அதிகரித்திருந்தாலும் காடுகளில் இருந்து வனவுயிர்கள் வெளிவரும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகளவில் நிகழ்கின்றது. இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வனப் பகுதிகளில் இருந்து வன உயிர்கள் வெளியேறி பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக 2017 ஆம் ஆண்டு 1976 சம்பவங்களும் 2018 ஆம் ஆண்டு 2158 சம்பவங்களும் 2019 ஆம் ஆண்டு 3478 சம்பவங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்தார்.

காடுகளின் பரப்பளவு உயர்ந்து வருவதாக மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதிலும் வனவிலங்குகளால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது காடுகளில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நிகழ்வைதையே வெளிக்காட்டுவதாக கூறுகிறார் சூழலியல் எழுத்தாளரும் வன உயிரின ஆர்வலருமான கோவை சதாசிவம்

தமிழ்நாட்டில் இப்படியாக வனவுயிர்களால் ஏற்படும் பயிர்ச்சேதங்களுக்கு இழபீட்டுத் தொகையாக 2017ஆம் ஆண்டு 181.41 லட்சம் ரூபாயும், 2018ஆம் ஆண்டு 215.51 லட்சம் ரூபாயும் 2019ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை 41 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளைநிலத்தில் யானை, காட்டுப்பன்றி, கரடி போன்ற வனவுயிர் நுழைந்து பயிர்கள் சேதமடைந்து விட்டால் அதற்கு இழப்பீடு வாங்க ஒரு விவசாயி கிராம நிர்வாக அலுவலர், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஆகிய 3 துறைகளிடன் முறையிட்டால் மட்டுமே இழப்பீட்டை பெற முடியும். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இழப்பீடு பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம்.

வனவிலங்குகளால் பயிர்ச்சேதம்

வனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் பிரச்னைக்கு காடழிப்பு, பணப்பயிர் மாற்றம், நிலப்பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்ற நிலையில் பல அரசுத் துறைகளும் இணைந்து ஒரே குடையின் கீழ் விவாதித்து இச்சிக்கலை தீர்க்க நீடித்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: Forest deforestation, Wild Animal