Home /News /national /

அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை பறவை கண்டுபிடிப்பு

அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை பறவை கண்டுபிடிப்பு

அறிய பறவை கண்டுபிடிப்பு

அறிய பறவை கண்டுபிடிப்பு

அழகிய நீர்நிலையின் நடுவே ஒரு பாறையின் மீது இந்த ஹெரான் பறவை அமர்ந்திருந்த போது இந்த படம் எடுக்கப்பட்டது.

உலகில் சில வகை பறவை இனங்கள் மிக குறைவாகவே இருக்கும். நாம் இது வரை பார்த்திராத பறவை இனங்கள் ஏராளம் உள்ளது. சிலவற்றை மட்டுமே நாம் இதுவரை கண்டுபிடித்து உள்ளோம். நாம் சிறு வயதில் பார்த்த பல பறவைகள் கூட தற்போது குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மனிதர்களின் செயல்கள் தான். இதே போல வெவ்வேறு பறவை இனங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. அந்த வகையில் சில பறவைகள் மனிதர்களிடம் இருந்து தள்ளி இருந்து வாழ்ந்து வரும்.

இப்படிப்பட்ட பறவை இனங்களை நம்மால் காட்டில் காண முடியும். மேலும் பறவைகளின் இடப்பெயர்தல் காலங்களில் புது புது பறவைகளை நம்மால் காண முடியும். இது போன்ற நேரங்களில் பல்வேறு புது வகை பறவைகளும் நமது கண்ணில் தென்படும். அந்த வகையில் ஹெரான் வகை பறவைகளில் சில அறிய வகைகளும் உள்ளது. வயிற்று பகுதியில் வெள்ளை நிறத்தை கொண்ட ஹெரான் பறவை ஒன்று அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் உள்ள கம்லாங் புலிகள் காப்பகம் அருகில் தென்பட்டுள்ளது.

இந்தியாவின் 50வது புலிகள் காப்பகமான கம்லாங் வனவிலங்கு சரணாலயம், கிழக்கு இமய மலையின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு பெரும்பாலும் காணப்படும் பறவையின் புகைப்படங்களை அவ்வப்போது இந்த காப்பகத்தின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்கள். அதன்படி, வெள்ளை-வயிற்று ஹெரான் (ஆர்டியா இன்சிக்னிஸ்) அல்லது பெரிய வெள்ளை-வயிற்று ஹெரான் என்றும் அழைக்கப்படும் ஒருவகை ஹெரான் பறவையை புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : கேரளாவில் ஸ்டைலிஷ் மாடலான 60 வயது தினக்கூலி தொழிலாளி- இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்

அழகிய நீர்நிலையின் நடுவே ஒரு பாறையின் மீது இந்த ஹெரான் பறவை அமர்ந்திருந்த போது இந்த படம் எடுக்கப்பட்டது. அழிந்து வர கூடிய இனத்தை சேர்ந்த இந்த பறவை சில வினாடிகள் மட்டுமே காட்டுப்பகுதிக்குள் பறந்து சென்றதை இந்த பதிவில் காணலாம். மேலும் இந்த டிவிட்டர் பதிவில், "AITE 2021-22 இல் காணப்பட்ட ஒயிட் பெல்லிடு ஹெரான் (ஆர்டியா இன்சிக்னிஸ்) பறவை, தொந்தரவு எதுவும் இல்லாத வாழ்விடங்களை விரும்புகிறது. உலகில் 250 அறிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலின் கீழ் IUCN அமைப்பினால் இது வகைப்படுத்தப் பட்டுள்ளது" என்று கம்லாங் டைகர் ரிசர்வ் காப்பகத்தின் டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

 



 

இந்த வீடியோவானது பிப்ரவரி 12 அன்று பகிரப்பட்டது. இதுவரை 5,700 பேர் இதை பார்த்துள்ளனர். கம்லாங் புலிகள் காப்பகம் என்பது அதன் வழியாக பாயும் கம்லாங் நதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சரணாலயத்தில் 60-க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்கள், 105 பறவை இனங்கள் மற்றும் 20 வகையான ஊர்வன இனங்கள் உள்ளது. பெரிய பூனை வகை இனங்களில் ராயல் பெங்கால் புலி, சிறுத்தை, மேக சிறுத்தை, பளிங்கு பூனை, சிறுத்தை பூனை மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவை இங்கு உள்ளது.

இதையும் படியுங்கள் : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு... நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விநியோகம்

மேலும் இங்கு ஆசிய யானைகள், காட்டுப்பன்றிகள், சாம்பார் மான்கள், பார்க் மான்கள், கருப்பு ராட்சத அணில் ஆகியவை இந்த பூங்காவில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க விலங்கு இனங்கள் ஆகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Birds, Tiger, Trending

அடுத்த செய்தி