Home /News /national /

ஒல்லியான உடல்வாகு: சிறை கம்பியின் இடையே புகுந்து தப்பிச்சென்ற இளைஞர்! - வீடியோ

ஒல்லியான உடல்வாகு: சிறை கம்பியின் இடையே புகுந்து தப்பிச்சென்ற இளைஞர்! - வீடியோ

நண்பரின் வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவரை மீண்டும் அங்கிருந்து கைது செய்து 9.30 மணிக்குள் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

    புனேவில் திருட்டு வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட 19 வயது இளைஞர் ஒருவர் தனது ஒல்லியான உடல்வாகை பயன்படுத்தி சிறை கம்பிகளின் இடையே புகுந்து தப்பிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் திங்களன்று காலை 7.30 மணியளவில் புனேவின் சக்கன் காவல் நிலையத்தின் சிறையில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

    திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர், போலீஸ் காவலில் சிறையில் இருந்தார். சிறை கதவின் இரும்பு கம்பிகளுக்கு இடையே புகுந்து அவர் தப்பிச்சென்றுள்ளார். அங்கிருந்து அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவரை மீண்டும் அங்கிருந்து கைது செய்து 9.30 மணிக்குள் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து, மீண்டும் அவரை சிறையில் அடைப்பதற்கு முன்பு காவல்துறையினர் அவர் எப்படி தப்பிச்சென்றார் என்பதை செய்து காட்டும் படி கூறியுள்ளனர். அந்த இளைஞர் செய்து காட்டுவதை வீடியோவாக பதிவு செய்து போலீசார் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோ, தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த விநோதமான சம்பவத்தை வைத்து பல்வேறு மீம்ஸ்களை தயார் செய்து வேடிக்கையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Prison, Pune

    அடுத்த செய்தி