வேறு பெண்ணுடன் உல்லாசம்.... வீடுபுகுந்து வெளுத்து வாங்கிய மனைவி... (வீடியோ)

தெலங்கானாவில் மனைவியை சித்திரவதை செய்து தாய் வீட்டுக்கு துரத்திவிட்டு, 3 இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார் மனைவி. வீட்டுத் தகராறு வீதிக்கு வந்தது எப்படி?

  • News18 Tamil
  • Last Updated: September 3, 2020, 11:05 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் மனகோடூரு மண்டலத்திலுள்ளது உட்டிக்கூறு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெத்த பள்ளி மாவட்டத்திலுள்ள சுல்தான்பாத் மண்டலத்தை சேர்ந்த சின்ன சின்னபொங்கூறு கிராமத்தில் வசிக்கும் கொண்டி சம்பத என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

சிலகாலம் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்திய சம்பத் அதன்பின் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

கரீம்நகரில் ஒரு ஷாப்பிங் மாலில் வேலை செய்துவந்த சம்பத் அங்கு உடன் வேலை செய்யும் ஒரு இளம் பெண்ணை தன்னுடைய வலையில் வீழ்த்தி ரகசியமாக திருமணம் செய்து கரீம் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து குடும்பம் நடத்தினார்.


இது பற்றி அறிந்த சம்பத்தின் முதல் மனைவி, அவருடைய பெற்றோர்கள் ஆகியோர் அங்கு சென்று அவரை கோபம் தீரும் வரை அடித்து கயிற்றால் கட்டி வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தனர்.  பின்னர் அங்கிருந்து கரீம்நகர் முதலாவது நகர காவல் நிலையம் வரை அடித்து இழுத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோல் மனைவி உட்பட 4 பெண்களை திருமணம் என்ற பெயரில் தன்னுடைய வலையில் வீழ்த்தியது தெரியவந்தது.
வேலைக்கு செல்லும் ஏழை வீட்டு பெண்களை குறிவைத்து மோசடியில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பத் மனைவி மற்றும் அவரிடம் ஏமாந்த 3 பெண்கள் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரீம் நகர் போலீசார் சம்பத்தை கைது செய்தனர்.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading