கேரளாவில் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

அந்த மாட்டை மருத்துவ பரிசோதனை செய்ததில், பசுவிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கேரளாவில் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - காட்டிக்கொடுத்த சிசிடிவி
குற்றவாளி - பசு மாடு (மாதிரி)
  • Share this:
கேரளாவில் பசுவை  பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் என்ற பகுதியில் பசு மாடு ஒன்று அடிக்கடி கொட்டகையில் இருந்து காணாமல் போயுள்ளது. பிறகு வேறு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொட்ரபாக போலீசிடம் புகார் அளித்த அதன் உரிமையாளர், வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிசிடிவி காட்சியில் ஒருநபர் கொட்டகையில் நுழைந்து மாட்டை ஓட்டி சென்றது தெரிந்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.


இரவு நேரத்தில் அனைவரும் தூங்க சென்ற பின், அந்த நபர் கட்டி வைக்கப்பட்ட பசுவை ஓட்டி சென்று மறைவான இடத்தில் வைத்து தொடர்ந்து பாலியல் உறவு கொண்டதாக கூறியுள்ளார். பின்னர், அந்த பசுவை அங்கேயே விட்டுவிட்டு சென்று விடுவாராம்.

இதையடுத்து, அந்த மாட்டை மருத்துவ பரிசோதனை செய்ததில், பசுவிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading