• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • செல்போன் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்: 6 பேர் கைது!

செல்போன் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்: 6 பேர் கைது!

 செல்போன் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்: 6 பேர் கைது!

செல்போன் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்: 6 பேர் கைது!

செல்போன் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கோவாவில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்.28, 29 ஆகிய தேதிகளில் கோவாவில் இருந்து சிலர் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்து வருவதாக கோவா குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராகுல் பராப் தலைமையிலான காவர்கள் குழு அமைக்கப்பட்டு, சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவாவில் உள்ள டிசோசா விருந்தினர் மாளிகையில் சோதனை மேற்கொண்டதில், ஜெய்ப்பூரை சேர்ந்த 6 பேர் தங்கள் கணினியில் மென்பொருள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி ஐபிஎல் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தானில் தாங்கள் பிடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கோவாவில் சுற்றுலா வந்தவர்கள் போல் அறை எடுத்து தங்கியிருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து, அவர்கள் அன்றைய தினம் நடந்து வந்த ஐபிஎல் போட்டியில் மட்டும் ரூ.4 லட்சம் அளவுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் திரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து மடிக்கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனைங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: