இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால நண்பரான இவர், அவருடன் இணைந்து பள்ளிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் இந்திய அணிக்கும் தேர்வாகி பல போட்டிகளில் விளையாடியுள்ளார். 1993இல் இருந்து 2000 வரை இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடியுள்ளார். 51 வயதான வினோத் காம்ப்ளி தற்போது மும்பை நகரில் உள்ள பாந்திரா பகுதியில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா குடும்ப வன்கொடுமை புகார் அளித்துள்ளார். மும்பை பாந்திரா காவல் நிலையத்தில் அவர் அளித் புகாரின் பேரில் வினோத் காம்ப்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று வினோத் காம்ப்ளி தீவிர மதுபோதையில் இருந்ததாகவும், மனைவி ஆண்ட்ரியாவுடன் சண்டை போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்த நிலையில், வினோத் காம்ப்ளி சமையல் பாத்திரத்தின் கைப்பிடியை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் மனைவி ஆண்ட்ரியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கிரிக்கெட் பேட்டை கொண்டு வினோத் அடிக்க முயன்றதாகவும் அதில் இருந்து மனைவி ஆண்ட்ரியா தன்னை தற்காத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களை இரு குழந்தைகள் முன்னரே வினோத் செய்ததாகவும், சம்பவத்திற்குப் பின் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின்னர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆண்ட்ரியாவின் புகாரின் பேரில் 324 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வினோத் காம்ப்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காம்ப்ளி கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer, Mumbai, Wife compliant