ஹோம் /நியூஸ் /இந்தியா /

எம்எல்ஏக்கு போட்டியிடும் ஜடேஜா மனைவி? பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்.. களைகட்டும் குஜராத் தேர்தல்!

எம்எல்ஏக்கு போட்டியிடும் ஜடேஜா மனைவி? பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்.. களைகட்டும் குஜராத் தேர்தல்!

மனைவியுடன் ஜடேஜா

மனைவியுடன் ஜடேஜா

அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீநதிர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே அங்கு தேர்தல் ஜுரம் பற்றத் தொடங்கிவிட்டது. 27 ஆண்டுகளாக அங்கு அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் டில்லி மாடல், பஞ்சாப் மாடல் ஆட்சியை முன்வைத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி காய்களை நகர்த்தி வருகிறது.

  நீண்ட காலமாக ஆட்சிக்கு வரமுடியாத வெறுப்பில் காங்கிரஸ் கட்சியும் முட்டி மோதி வருகிறது. இப்படி குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பாஜக சார்பில் பல்வேறு பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ரிவாபா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தில் இருந்து ரிவாபா வந்திருந்தாலும் அவர் தற்போது பாஜகவின் அங்கமான கர்னி சேனாவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ரிவாபா. இதே போல் பல்வேறு பிரபலங்களும் போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருக்கின்றனர்.

  இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்- பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

  ஏற்கனவே குஜராத் சட்டசபை தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சித் தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் வேட்பாளர்கள் இன்றைக்குள் முடிவு செய்யப்பட உள்ளார்கள். இதற்காக பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

  காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் அண்மையி்ல் இணைந்த ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர் போன்ற இளம் தலைவர்ளும் வாய்ப்பு கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கப்படாது எனவும், புதுமுகங்கள் நிரறையப் பேரை களமிறக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வியூக ங்களை உடைத்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியின் முதல்படியாக இன்று வேட்பாளர் தேர்வு அமைந்தால், குஜராத்தில் பாஜகவின் வெற்றி சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை

  Published by:Srilekha A
  First published:

  Tags: Assembly Election 2022, Election, Ravindra jadeja