ஹோம் /நியூஸ் /இந்தியா /

முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்

முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்

கொடியேறி பாலகிருஷ்ணன்

கொடியேறி பாலகிருஷ்ணன்

Kodiyeri Balakrishnan passes away | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.

 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். 2006 முதல் 2011 வரை வி.எஸ்.அச்சுதானந்தன் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய பாலகிருஷ்ணன், 2015ல் கட்சியின் மாநிலச் செயலாளராக ஆனார்.

  கொடியேரி பாலகிருஷ்ணன் புற்றுநோய் காரணமாக அவதிபட்டு வந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  Published by:Vijay R
  First published: